சிங்களவர்களுக்கு வைத்தது மன்னார் நீதிமன்றம் ஆப்பு: புலிகள் பட்டியல் எங்கே ?
இதையடுத்து அந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்ட போதும்இ நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் சரணடைந்தவர்களின் பட்டியலுக்குப் பதிலாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டோரின் பட்டியலை இராணுவத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் வேறு பட்டியல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் இராணுவத் தரப்பு கூறியிருந்தது. நேற்று நடந்த விசாரணையின் போது மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன சரணடைந்தவர்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் பற்றிய பட்டியலை இராணுவத் தலைமையகம் வரும் ஜனவரி 30ஆம் நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


குறிப்பாக தலையங்கத்தில் மன்னார் நீதிமன்றம் எனவும் விரிவான செய்தியில் முல்லைத்தீவு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான் அறிந்த வரையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தான் இவ்வழக்குகள் இடம் பெறுவதாக அறிந்து உள்ளேன்
ReplyDelete