புலிகளின் கட்சி உறுப்பினர் தூக்கில்: எப்படி இறந்தார் என்பது பெரும் மர்மமாக உள்ளது
2009ம் ஆண்டுக்குப் பின்னர் சரணடைந்த விடுதலைப் புலிகளில், பல நூறுபேரை ராணுவம் போட்டு தள்ளியது. விடுவிக்கப்பட்ட ஆண் போராளிகள் பலர் மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள். அவர்கள் உடலில் பலவிதமான நோய்கள். மெல்ல மெல்ல கொல்லும் விஷ ஊசிகளை, சீனாவிடம் இருந்து பெற்று அதனை போராளிகளுக்கு ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது. பல போராளிகள் நோய்வாய்பட்டு மரணமடைய, சில போராளிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மன உளைச்சலுக்கு ஆளாகியும் உள்ளார்கள்.
ஆனால் யாழில் ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியை தொடங்கிய சில போராளிகள். அரசியல் ரீதியாக போராடி வரும் நிலையில் , நேற்று அக்கட்சியை சேர்ந்த இனியவன் சாவகச்சேரி பகுதியில் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள நிலையில். அவர் ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்யவேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அவர் நல்ல மன நிலையில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
யாரோ அவரைக் கொலை செய்து பின்னர் தூக்கில் இட்டிருக்கவேண்டும் என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், பொலிசார் பெரும் அசமந்த போக்கை கடைப்பிடிப்பது மேலும் சந்தேகங்களை எழுப்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் அதிர்வுக்கு தெரிவித்துள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்