டொனால் ரம் மட்டும் அல்ல பிரித்தானிய அரசியலிலும் புட்டின் விளையாட்டு உள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக மிக நுட்ப்பமான முறையில், சில தில்லுமுல்லுகளை விட்டு டொனால் ரம்பை ரஷ்ய அதிபர் புட்டின் வெற்றிபெற வைத்துள்ளார். ஆனால் இதனை சட்டபூர்வமாக நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. இதனை அதிபர் ஒபாமா நன்றாக அறிவார். ஆனால் பிரித்தானியாவில் முன் நாள் பிரதமராக இருந்த டேவிட் கமரூன் அரசியல் வட்டாரத்திலும் புட்டின் ஆட்கள் ஊடுருவியுள்ளதாக தற்போதைய பிரதமர் தெரேசா மே அறிந்து அதிர்ந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது அமைச்சரவையில் உள்ள சில நெருங்கிய சகாக்கள், மற்றும் கட்சிக்கு நிதி உதவி செய்யும் சில முக்கிய புள்ளிகள் தொடர்பாக உடனடியாக புலனாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல ஆயில் நிறுவனம் ஒன்றினூடாக காய் நகர்த்திய புட்டின். குறித்த கம்பெனியை பாவித்து, அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஊடாக கான்சர்வேட்டிவ் கட்சிக்கு நிதி உதவி வழங்கியுள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இது உண்மை தானா என்று ஆராயுமாறு பிரதமர் பணித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்