காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தால் நல்லூரான் புனிதத்துக்கு கேடா ?
நல்லூரில் கோவிலைசூழ போராட்டங்கள் நடத்துவதற்கு தடைவிதித்து பதாகைகள் இரவோடு இரவாக நாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புனித பூமி பேணுவோம், கோவில் வெளி வளாகம் (வேலிக்குள்) கூட்டங்கள் , போராட்டங்கள் செய்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என குறித்த பாதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.நல்லூர் கோவில் பகுதியில், பல முக்கிய போராட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. அண்மையில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டமும் அங்கு இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின்உறவுகள் வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இன்று நான்காவது நாளாக தொடரும் இப்போராட்டத்தில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நல்லூரில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக நல்லூரில் தடை பதாகைகள் நாட்டப்பட்டுள்ளன.
நல்லூர் பகுதியில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமையானது இலகுவாக கவனத்தை ஈர்க்கக்கூடியது.மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையானது உரிய தரப்புகளின் கவனத்தினை ஈர்க்க வேண்டியுள்ள இத்தருணத்தில் இவ்வாறான பதாகை நாட்டப்பட்டுள்ளமையானது சமூகவலைதளங்களில் கடும் விசனத்துக்குள்ளாகியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்