999 பொலிசாருக்கு போன் செய்து அம்மா உயிரை காப்பாற்றிய 4 வயது சிறுவன் இவன் தான்
வெறும் 4 வயதுச் சிறுவன் ஒருவன், 999 அவசர பொலிசாருக்கு தொடர்புகொண்டு, எனது அம்மா நிலத்தில் விழுந்து கிடக்கிறார். எழும்ப மாட்டேன் என்கிறார் என்று கூறியுள்ளான். நிலமையை உடனே புரிந்துகொண்ட பெண் பொலிஸார் அச்சிறுவனோடு பேசிக்கொண்டு, அவனது அம்மா ஏதோ ஆபத்தில் இருப்பதை உணர்ந்து உடனே பொலிசாரை அங்கே அனுப்பியுள்ளார்.
வீட்டுக்கு சென்ற பொலிசார் , அங்கே தாயார் மயங்கி கிடந்ததை கண்டு உடனே வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ளார்கள். சரியான நேரத்தில் வைத்தியர்கள் வந்ததால் அம்மா காப்பாற்றப்பட்டுள்ளதாகவும். குறித்த தாயாரது இதய துடிப்பு குறைந்து சென்றுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கவனிக்காமல் விட்டிருந்தால் அவர் இறந்திருப்பார் என்று தெரிவித்த மருத்துவர்கள். நாலே வயதான சிறுவன் எவ்வாறு பொலிசாருக்கு போன் அடித்தான் என்று தெரியவில்லை என்றும். அச்சிறுவன் மிகவும் புத்திசாலியாக இருக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்