முன்கோபத்தால் ஏற்பட்ட விபரீதம்; 2 வயதுக் குழந்தையை மாடிப்படியில் வீசியெறிந்த தாய் (காணொளி)
டெல்லியில், கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து கோபமடைந்த பெண் ஒருவர், தனது இரண்டு வயது மகனை மாடிப்படிகளில் தூக்கியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதின் குப்தா என்பவர் சோனு குப்தா (26) என்ற பெண்ணை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்தார். சோனு குப்தா கடும் முன்கோபி. கோபம் வந்தால் வெறிபிடித்தவர் போலாகிவிடுவார். இதனால் நிதின்-சோனு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை மூள்வதுண்டு. சோனுவால்தான் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக வீட்டில் இரண்டு கண்காணிப்பு கெமராக்களை நிதின் பொருத்தியிருந்தார்.
இந்த நிலையில், தமது சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பிரித்துத் தர விரும்பிய நிதினின் பெற்றோர், அது குறித்துப் பேசுவதற்காக தமது மற்றைய பிள்ளைகளுடன் நிதினின் வீட்டுக்குச் சென்றிருந்தனர். பாகப்பிரிவினை தமக்கு சாதகமாக இல்லாததைக் கண்டு கொதித்துப் போன சோனு, நிதினின் பெற்றோர் மற்றும் சகோதரியருடன் சண்டை போட்டிருக்கிறார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென கோபம் தலைக்கேறிய சோனு, தூங்கிக் கொண்டிருந்த தனது இரண்டு வயது மகனைத் தூக்கிச் சென்று மாடிப்படியில் இருந்து கீழே எறிந்தார். இந்தக் காட்சி கண்காணிப்பு கெமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றபோதும்,
இது குறித்து நிதின் கடந்த செவ்வாயன்றே பொலிஸில் புகாரளித்துள்ளார். சோனு மீது கொலை முயற்சியின் பேரில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள போதும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
மேலும், சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு மேல் புகாரளிக்க என்ன காரணம் என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்