மீண்டும் லண்டனை தாக்கவுள்ள கடும் பனி இம்முறை - 10க்கு செல்லவுள்ளது குளிர்
தென் துருவத்தில் ஏற்பட்ட அமுக்கம் காரணமாக , அங்கிருந்து பாரிய பனிப் புயல் ஒன்று ஐரோப்பாவை நோக்கி நகர்ந்து வருகிறது. குறித்த கடும் குளிர் காற்று பிரித்தானியாவை கடந்து ஆபிரிக்க கடல் வரை நீண்டு செல்ல உள்ளது. இதனால் அடுத்த மாதம்(பெப்ரவரி) மிகவும் கடும் குளிர் நிலவவுள்ளதாக பிரித்தானியா வாநிலை ஆராட்சி மையயம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட கடும் குளிரில் ஐரோப்பாவில் சுமார் 1023 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில். மீண்டும் கடும் குளிர் பிரித்தானியாவையும், அதன் தலை நகர் லண்டனையும் தாக்கவுள்ளது. இக் குளிரானது மார்ச் மாதம் வரை தொடர்ந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்