இதுவரை 100 பேரை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் கொலையாளி திடீர் தாக்குதலால் மரணம்
ஐ.எஸ் அமைப்பில் இருந்துகொண்டு, இதுவரை சுமார் 100 க்கும் அதிமானவர்களை வெடிக் கொலை செய்துள்ள அபு சயாவ் என்னும் நபர், திடீர் தாக்குதல் ஒன்றில் சிக்கி சின்னாபின்னமாகி மரணமடைந்துள்ளார். ஈராக்கில் மொசூல் நகரை முழுமையாக கைப்பற்ற அன் நாட்டு படை பெரும் போரை தொடுத்துள்ள நிலையில். மொசூல் நகரில் இருந்து தப்பிச் செல்ல அபு சயாவ் முனைந்துள்ளார்.
ஆனால் ஒரு இடத்தில் பதுங்கி நின்ற ஈராக் படையினர் , இவர்மீது சற்றும் எதிர்பாராமல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதனால் படுகாயமடைந்த இவர் ஸ்தலத்திலேயே துடிதுடித்து இறந்துபோனதாக ஈராக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இவர் மீது ஒரு கண் வைத்திருந்தது. இருப்பினும் இவர் இவ்வளவு சீக்கிரம் சிக்குவார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்