லண்டன் றோட்டில் பள்ளம்: உங்கள் கார் பாதிக்கப்பட்டால் கிளைம் போடலாம்
இந்த ஆண்டில் பல கவுன்சில்கள் (மாநகராட்சி) சுமார் 11 மில்லியன் பவுண்டுகளை வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கியுள்ளது. லண்டனில் பல வீதிகளில் குன்றும் குழியும் காணப்படுகிறது. சில வீதிகளில் காணப்படும் குழிகள் மிகவும் ஆழமானவை. இவை இரவில் கண்ணுக்கு புலப்படுவது இல்லை. நீங்கள் காரை ஓட்டிச் செல்லும் வேளை கார் அந்தக் குழிக்குள் வீழ்ந்தால் உங்கள் காசின் டயர் பாதிக்கும் இல்லையேல் பம்பர் அடிபட்டு பாதிப்புக்கு உள்ளாகும்.
இது கவுன்சிலின் பிழையே தவிர உங்களுடைய பிழை அல்ல. எனவே தகுந்த ஆதாரங்களை காட்டி , நீங்கள் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினால் அவர்கள் அதற்கான இழப்பீட்டை தரவேண்டும். மேலும் றோட்டில் தண்ணீர் தேங்கி நிற்ப்பது, குழிகள் இருப்பது என்பது கவுன்சிலின் பிழைகளே ஆகும். இதனை அவர்களே சரிசெய்யவேண்டும்.
இன் நிலையில் இதுபோன்ற பல பாதிப்புகளுக்கு வாகன ஓட்டுனார்கள் உள்ளாகி வருகிறார்கள். வெள்ளை இனத்தவரை பொறுத்தவரை அவர்கள் சண்டை பிடித்தாவது, தமது காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலம் சரியாக பேசவராது என்ற காரணத்தால் பல வெளிநாட்டவர்கள், இது போன்ற விடையங்களை கவனிப்பது இல்லை. தாமே செலவு செய்து வாகனத்தை பொருத்திவிட்டு எமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவது வழக்கம்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்