அடி காயங்களோடு சடலம்: தமிழ் பகுதியில் தொடரும் மர்ம கொலைகள் இவை தான்
அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில் உள்ள வடினாகல பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. குறித்த நபர் தற்போது வரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன் நபர் யார் என்பது தொடர்பாக பொலிசார் பாரிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் இது வரையில் தெரியவரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் உடலில் உள்ள வெட்டுக் காயங்களை பார்க்கும் வேளை, அவர் கொல்லப்பட வேண்டும் என்ற ரீதியில் தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
நாளுக்கு நாள் தமிழர் தாயகப் பகுதிகளில், இது போன்ற படுகொலைகள் இடம்பெற்று வருவதும். இனம் தெரியாத நபர்கள் இவ்வாறு வெட்டப்பட்டு சடலமாக கிடப்பதும் அதிர்கரித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு படு கொலை இல்லையேல் 2 படுகொலை என்ற வீகிதத்தில் இது நீண்டு செல்கிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்