Header Ads

தென்னாபிரிக்காவில் இருந்து தலைவர் பேசினார் இப்ப தான் நேரடி தொடர்பு கிடைத்தது



விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசின் இன அடக்கு முறைக்கு எதிராக போராட ஆரம்பித்த காலம் முதல், அவ்வியக்கத்திற்கு பொதுமக்கள் பல நன்கொடைகளை வழங்கி போராட்டத்தை மேலும் செம்மை படுத்தினார்கள் என்பதனை மறக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது. ஆனால் 2009ம் ஆண்டு அவர்களை இலங்கை ராணுவம் யுத்த ரீதியாக வென்ற பின்னர், புலிகள் பெயரில் உள்ள பல சொத்துக்களோடு பலர் கப் சிப் ஆகிவிட்டார்கள்.

தமிழ் நாட்டை பொறுத்தவரை புலிகளிடம் பணம் பெற்று, சினிமா படங்களை இயக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் உள்ளார்கள். இவர்கள் கைகளில் கோடிக்கணக்கில் புலிகளின் பணம் உள்ளது. தற்போது ஈழத்தில் பல விடுதலைப் புலிகள் முன் நாள் உறுப்பினர்கள் கஷ்டத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு உதவிசெய்யவாவது கொஞ்சம் பணத்தை தாருங்கள் என்று , அங்கவீனமுற்ற போராளி ஒருவர் கேட்டுள்ளார்.

"அப்பிடிங்களா"  தலைவர் என்னோட தென்னாபிரிக்காவில் இருந்து நேற்று தான் பேசினார். அவருக்கு குண்டு பட்டு பக்கவாதம் வந்திருக்கு தப்பி. அதுக்கு நான் செலவு செய்த காசு பற்றி உங்களுக்கு தெரியாது. அப்புறம் அவர் சொன்னா நான் தந்துடுவேன். ஆனால் அவர் அப்படி எதனையும் சொல்லலையே என்கிறார் இந்த தயாரிப்பாளர். 2 எழுத்தில் படம். தமிழ் இன உணர்வாளர் என்று தன்னை காட்டிக்கொள்ளும் இது போன்ற மனிதர்களை என்னவென்று சொல்வது ? 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.