றோபோக்களை கொண்டு நிலவை கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ள ரஷ்யா வீடியோ இணைப்பு
சைபர் றோபோக்களை(5ம் தலைமுறை) நிலவுக்கு அனுப்ப ரஷ்யா திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக அது சிறப்பான றோபோக்களை தயாரித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. குறித்த றோபோக்களை கொண்டு, நிலவில் வீடுகளை அமைப்பது. நிலவில் உள்ள சில இடங்களை செம்மை படுத்தி , மனிதர் சென்று வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது என்பது போன்ற சில திட்டங்களை ரஷ்யா மேற்கொள்ள உள்ளது.
தற்போது ரஷ்யா தயாரித்துள்ள இந்த சைபர் றோபோக்கள், கார் ஓட்ட வல்லவை , மேலும் கட்டடம் கட்டவும் , ஏன் உடல் பயிற்சியிலும் கூட ஈடுபட வல்லவை என்கிறார்கள். இதனை ரஷ்யா வீடுகளை அமைக்க தான் பாவிக்குமா ? இல்லை நிலவில் ஏதாவது தாக்குதல் தளம் ஒன்றை நிறுவ உள்ளதா என்று தெரியவில்லை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்