Header Ads

மீட்டிங் நேரத்தில் பொலிஸ் மா அதிபருக்கு போன் போட்டது பிரதமர் ரணிலா புது சர்சை



பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில்  அழைத்த ‘சேர்’ சட்ட  ஒழுங்கு அமைச்சரா? பிரதமரா என்பது அநுர திஸாநாயக்கவின்  கற்பனையாகும். ‘சேர்’ என்பது அவருடைய பாடசாலை ஆசிரியராக இருக்கலாம். நான் கூட எனது ஆசிரியரை ‘சேர்’ என்றே இப்போதும் அழைக்கிறேன் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க   எழும்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அமைச்சர்  மேற்கண்டவாறு  தெரிவித்தார். இதன் பிரகாரம் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’ சட்டம் ஒழுங்கு அமைச்சரா? அல்லது பிரதமரா? என்பதனை அமைச்சர் சபையில் அறிவிக்க வேண்டும் என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல எழுந்து பேசுகையில்,

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’ சட்டம் ஒழுங்கு அமைச்சரா? பிரதமரா? என்பது ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் கற்பனையாகும். பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’ அவரது பாடசாலை ஆசிரியராக இருக்கலாம். நான் கூட எனது ஆசிரியரை இன்னும் கூட சேர் என்றே  அழைக்கிறேன் என்றார். இதன்போது சபையில் இருந்த எம்.பி.க்கள் சிரித்தும் கிண்டலாக கோஷமும் எழுப்பினர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.