கோவாவில் ஓடு பாதையை விட்டு விலகிய விமானம்: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
டுபாயிலிருந்து 161 பயணிகளுடன் கோவா விமான நிலையத்திற்கு சென்ற ஜெட் ஏயர்வேஸ்க்கு சொந்தமான விமானம் சில பயணிகளை இறக்கிவிட்டு தொடர்ந்து மும்பைக்கு புறப்பட்டபோது இன்று அதிகாலை ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது விமானத்திலிருந்து புகை வெளியேறியதால் அவசராமாக பயணிகளை இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்திலிருந்த 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் அவசர தரையிறங்கள் பகுதியின் ஊடாக பயணிகள் மோதிக்கொண்டு வெளியில் வர முனைந்தமையாலேயே பயணிகள் காயமுற்றுள்ளனர். அத்தோடு குறித்த ஓடுபாதையை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்ற நிலையில் பகல் 12.30 மணி வரையில் விமான சேவைகள் கோவாவில் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்