கருணாவை பிணையில் செல்ல அனுமதிப்பது என்று ரகசிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
கடந்த வாரம் கைதாகி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் கருணாவை, பிணையில் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு ஆய்வு நேற்றைய தினம்(வியாழன்) கொழும்பில் ரகசியமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தில் நடந்த இந்த ஆய்வில் , கருணாவை பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
எனினும் வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் வைத்து கருணாவில் பிணை மனு தாக்கல் செய்யப்படும் என்றும். அவ்வேளையில் அரச தரப்பு வக்கில் கடுமையாக எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்காவிட்டால். சிலவேளை கருணா பிணையில் செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான முன் ஏற்பாடுகளையே சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிலர் மேற்கொண்டுள்ளனர்.
அதாவது அரசு தரப்பு வக்கீல் அப்படியே மூடிக்கொண்டு இருந்தால் பிணை ஈசியாக கிடைத்துவிடும். அவ்வளவு தான் மேட்டர். இதனை ரகசியமாக காய் நகர்த்தியுள்ளார்கள் சில செல்வாக்கு மிக்க முன் நாள் அரசியல்வாதிகள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்