Header Ads

பெண்ணின் நகையை பறிக்க போய் சூடு வாங்கி இறந்த நபர்: மேலும் 2 வர் சிக்கினர்



திருகோணமலையில் கந்தளாய் பகுதியில் ஆட்டோ வைத்து ஓட்டும் நபர் ஒருவர், 26ம் திகதி பெண் ஒருவரின் நகையை திருடியுள்ளார். குறித்த பெண் அவரை அடையாளம் கண்டு பொலிசாரிடம் தெரிவித்த வேளை. பொலிசார் 27ம் திகதி அவரை தேடிச் சென்றவேளை. அவர் ஆட்டோவில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளார். ஆட்டோவை துரத்திய பொலிசார் அதனை நிறுத்துமாறு கட்டளையிட்டும் அது நிற்காமல் செல்லவே பொலிசார் உடனே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள்.

இதில் ஆட்டோவை ஓட்டிய கள்வன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளான். அது போக ஆட்டோவில் பின் பக்கத்தில் இருந்த மேலும் 2 இளைஞர்களை பொலிசார் காயங்களோடு கைதுசெய்துள்ளார்கள். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர்களிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு 3 பவுண் தங்க சங்கிலிக்காக உயிரை விட்ட கள்வன் இவராகதான் இருக்க முடியும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.