லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை 2017 முன் தாக்குங்கள் ஐ.எஸ் கட்டளை பிறப்பித்தது
லண்டன் மற்றும் ஐரோப்பிய நகரங்களை புத்தாண்டுக்கு முன்னர் தாக்குமாறும். 2017 தீ பொறியோடு பிறக்கட்டும் என்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைமை பீடம் கட்டளை பிறப்பித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான பல நபர்கள் சிலீப்பர் செல்களாக பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தாக்குங்கள் என்று தகவல் கிடைத்தால் போதும். உடனே தாக்குதலை ஆரம்பித்து விடுவார்கள்.
இன் நிலையில் லண்டனில் சுமார் 1 லட்சம் மக்கள், புத்தாண்டு அன்று கூடுவது உண்டு. புத்தாண்டை வரவேற்க்க வானவேடிக்கையோடு பல நிகழ்வுகள் நடைபெறும். இதனைக் காணச் செல்லும் அனைத்து தமிழர்களும் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இதற்காக நாம் போகவேண்டாம் என்று கூறவில்லை. என் நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.
இதனை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. பாரிஸ் மற்றும் ஜேர்மன் நகரில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது பொருந்தும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்