12 வயதில் லண்டனில் கத்தியை காட்டி கடையை கொள்ளையடிக்கும் சிறுவன் கம்பி எண்ணும் நிலை
இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் கடைகளை கத்தியை காட்டி கொள்ளையடித்து வந்த 12 வயது சிறுவனை பொலிசார் தடாலடியாக கைதுசெய்துள்ளார்கள். குறித்த சிறுவன் நல்ல உயரமானவர் என்றும். முகத்தை மூடியுள்ளதால் அவரது வயதை அறிய முடியாமல் இருந்தது என்றும் துரை என்னும் கடை உரிமையாளர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்தியர் ஒருவரது கடையை இவர் கொள்ளையடிக்க சென்றவேளை. சற்றும் எதிர்பாராமல் அங்கே மதியம் என்பதால் உள்ளே உணவை உண்டுகொண்டு இருந்த அவரது வேலையாட்கள் வெளியே வந்து குறித்த சிறுவனை குண்டுகட்டாக பிடித்துவிட்டார்கள். இதனூடாக பிடிபட்ட பின்னர் தான் அவர் 12 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.
பொலிசார் இச்சிறுவனை நீதிமன்றில் நிறுத்தியவேளை 12 வயது என்றும் பாராமல் நீதிபதி அவனுக்கு 6 மாத சிறை தண்டவை வழங்கியுள்ளார். கத்தியை கொண்டு திரிவது பிரித்தானியாவில் பாரதூரமான குற்றச் செயலாக கருதப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்