பெண்கள் பாத்ரூமில் இருந்து பெண்ணை தூக்கிச் சென்ற மர்ம நபர்
பிரிட்டன் சன்பெரி என்னும் இடத்தில் உள்ள, சீன உணவகம் ஒன்றில் நூடில் வேண்டும் என்று ஆடர் கொடுத்துவிட்டு காத்திருந்த இளைஞர் ஒருவர். திடீரென பெண்கள் பாத்ரூம் சென்று அங்கிருந்து ஒரு பெண்ணை வெளியே தூக்கிச் சென்றுள்ளார். இதனால் உணவத்தில் வேலை செய்யும் நபர்கள் பதற்றமடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனை அடுத்து பிரித்தானிய பொலிசார் மேற்கொண்ட விசாரணை மூலமாக , உணவகத்திற்கு வெளியே சிகரெட் குடித்துக்கொண்டு நிற்க்கும் இளைஞரின் CCTV பதிவுகளை எடுத்துப் பார்த்துள்ளார்கள். குறித்த இளைஞரை தேடிய பொலிசார் அந்த வீடியோவையும் உடனே வெளியிட்டார்கள்.
பெண் ஒருவரை நினைவிழக்கச் செய்து அவரை, தோழில் போட்டு தூக்கிச் சென்றுவிட்டார் இந்த இளைஞர் என்று முதலில் பொலிசார் நம்பினார்கல். குறித்த பெண்ணுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை என்று பதறியடித்தார்கள். ஆனால் வீடியோவைப் பார்த்த பல ஆயிரக்கணக்கானவர்களில் , பெண்ணின் தாயாரும் ஒருவர். அவர் உடனே பொலிசாருக்கு போன் செய்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் , தனது பெண் போதை மருந்துக்கு அடிமையானவர் என்றும். அவர் குறித்த உணவகத்தில் போதை மருந்தை எடுத்துவிட்டு பாத்ரூமில் விழுந்து கிடந்ததாகவும். அந்த வேளை அங்கே சென்ற அவரது காதலன் தன் காதலியை தொழில் போட்டு தூக்கிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
தற்போது நிலமையை புரிந்துகொண்ட பொலிசார் அப்பெண்ணை சென்று சந்தித்துள்ளார்கள். சில வேளைகளில் நாம் பார்க்கும் விடையம் எமது கண்களுக்கு பிழையாக தென்படலாம் என்பதற்கு இதுவே நல்லதொரு உதாரணம் ஆகும்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்