Header Ads

ட்ரம்பை விட ஹிலாரி அதிக வாக்குகள் பெற்றார் அதிர்ச்சி



அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்டு டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.The Associated Press-ன் வாக்கு எண்ணிக்கையின் படி கிளிண்டன் 63,390,669 வாக்குகளும், டிரம்ப் 61,820,845 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதாவது ட்ரம்பை விட, ஹிலாரி கிளிண்டன் 1,569,824 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

ஜனாநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி 48 சதவீத வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 47 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.எனினும், அதிபர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய தொகுதிகளில் ட்ரம்ப் வெற்றிபெற்றதால் குடியரசு கட்சி மொத்தம் உள்ள 538 தொகுதிகளில் 276 தொகுதிகளில் வெற்றி கண்டது.

இதன் மூலம் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். ஆனால், மக்கள் வாக்குகளின் படி ஹிலாரியே அதிபர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.