முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ மரணம்: - வீதியில் இறங்கி கொண்டாடி வரும் பொதுமக்கள்
கியூபா நாட்டு முன்னாள் ஜனாதிபதியும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை அந்நாட்டு குடிமக்கள் வீதிகளில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ இன்று அதிகாலை நேரத்தில் இயற்கையாக மரணத்தை தழுவியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய கியூபா குடிமக்கள் அவருடைய மரணச்செய்தியை கேட்டு மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
பிடல் காஸ்ட்ரோ மரணமான செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாலை நேரத்தில் அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டுள்ளனர்.சாலைகளில் கூடிய பொதுமக்கள் மது பாட்டில்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர்.அப்போது, கியூபாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய Rep Iliana Ros-Lehtinen என்பவர் பேசியபோது, ‘கியூபாவில் இப்போது தான் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
கியூபாவில் இப்போது தான் சுதந்திரமும் ஜனநாயகமும் மலர்ந்துள்ளது.கியூபாவில் உள்ள குடிமக்கள் தங்களுடைய உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படும் உரிமையை பிடல் காஸ்ட்ரோ பறித்துவிட்டார்.பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புரட்சியாளர் என்பதை விட அந்நாட்டின் சர்வாதிகாரி என்பது தான் சரியானது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்