கல்லூரி மாணவி கழுத்தை நெரித்துக்கொலை.. கைதான காதலன்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மலை மீது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 20ம் தேதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிந்தார். இந்த தகவல் ஆடு மேய்ப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் மாணவி கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்தபோது: இறந்த பெண் சுடிதாரில் கனிஸ்கா டெய்லர் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. இதனையடுத்து போலீசார் திருப்பத்தூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் வெண்ணிலா (21), என்பது தெரியவந்தது.
இறந்த மாணவி பெற்றோர் கொடுத்த தகவலின்பேரில் கருணாகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது: வெண்ணிலா கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவார். அப்போது எனக்கும் வெண்ணிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இது பற்றி எனது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் எனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். பின்னர் நான் கல்லூரியில் இருந்து வந்துவிட்டேன். பிறகு பெங்களூருவுக்கு சென்று கால் டாக்சி ஓட்டி வந்தேன். அப்போதும் எனக்கு வெண்ணிலா தொடர்ந்து போனில் பேசி வருவார். ஒரு நாள் தனியாக சந்திக்க வேண்டும் என்று சொல்லி அழைத்தார்.
அவரது அழைப்பை ஏற்று நானும் சூளகிரி மலை பகுதியில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது வெண்ணிலா என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாய். உன்னை சும்மாவிட மாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வெண்ணிலாவை கழுத்தை நெறித்து கொலை செய்தேன். பின்னர் தற்கொலை செய்து கொண்டதுபோல் வெண்ணிலாவை தூக்கில் தொங்கவிட்டு நான் பெங்களூர் சென்றுவிட்டேன். இதனை எப்படியோ போலீசார் அறிந்து என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்