Header Ads

லண்டனில் நடந்த பரிதாபமான சாவு கார் ஓடும் நபர்களே உங்களுக்கும் இந்த விபரீதம் நடக்கலாம்



லண்டனில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சக்கோடா காரை ஓட்டிச் சென்ற 32 வயது நபர் பரிதாபமாக இறந்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது. ஏன் எனில் அவர் ஓட்டிச் சென்ற கார் 2015ம் ஆண்டு புதுக் கார். அதில் உள்ள ஸ்குரூஸ் கன்றோலில் அவர் 70 மைல் வேகத்தில் செல்லவேண்டும் என்றும் விட்டுள்ளார். அவர் 70 மைல் வேகத்தில் பயணித்தவேளை திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. அவரது கார் 110 மைல் வேகத்தில் செல்ல ஆரம்பித்துள்ளது.

இதனை உணர்ந்த அவர் உடனே காரை நிறுத்த முயற்ச்சி செய்துள்ளார். ஆனால் பிரேக் பிடிக்க முடியவில்லை. பல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தனது மோபைல் போனை எடுத்து அவசரமாக 999 க்கு அழைப்பை விடுத்துள்ளார். தனது காரை நிறுத்த முடியவில்லை என்றும். காரை சுவிஜ் ஆப் செய்ய கூட முடியவில்லை என்றும். பாரிய கோளாறுகள் இருப்பதாகவும் தெரிவித்து உதவி கோரியுள்ளார்.

ஆனால் சடுதியாக அவரது கார் அங்கே நின்ற லாரி மீது மோதி, அவர் அவ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதி நவீன கார்களில் ஸ்குரூஸ் கன்றோல் வருகிறது. நாம் காலால் அமத்தாமலே ஒரு சீனா வேகத்தில் கார் செல்ல இது உதவுகிறது. ஆனால் காரில் இருக்கும் கம்பியூட்டர் இயங்க மறுத்தால் பெரும் விளைவுகள் ஏற்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.