பதினாறு வயதுச் சிறுமி இவரது குழந்தையயை இவர் கொன்று விட்டு மறைத்து..!
லில் (Lille - Nord) நகரத்தில் பதினாறு வயதுச் சிறுமியொருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டள்ளார். இவரது குழந்தையயை இவர் கொன்று விட்டு மறைத்துவைத்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லில் நகரத்தில் உள்ள rue des Bois-Blancs இல் அமைந்திரக்கும் இவரது பெற்றோரின் வீட்டில் உள்ள குளியறையில் இவர் தனது பிள்ளையைப பெற்றெடுத்துள்ளார். பதினைந்து நாட்களிற்கு முன்னர் நடந்த, இந்த இரகசியப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடலமே சிக்கி உள்ளது. குழந்தை இறந்தே பிறந்ததா, அல்லது, பிறந்த பின் கொல்லப்பட்டதா என்பது, இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கான காரணங்கள் ஆராயப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இந்தப் பதினாறு வயதுச் சிறுமி, இந்தக் குழந்தையின் உடலத்தை மறைத்து வைத்து, தன் நண்பியுடன் இணைந்து, அதனைப் புதைக்க முயற்சித்துள்ளார். இவர்களின் இன்னொரு நண்பி இதனைக் காவற்துறையினர்க்குத் தெரிவித்துள்ளதுடன் உடலம் மறைத்து வைக்கப்படடிருந்த இடத்தையும் காட்டிக் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில், உளநலமருத்துவமனையில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட இந்த இளம் தாய், நேற்று விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் குழந்தையின் உடலத்தைச் சில நாட்களாக மறைத்து வைத்திருந்த இவரது நண்பியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்