ஃபேஸ் புக் காதல் தோல்வி..! இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..!
சென்னையில் சர்மிளா (24), என்ற இளம்பெண் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணையில் கூறியதாவது:
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ் புக் மூலம் சர்மிளாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.பின்னர் சில மாதங்களுக்கு முன் சர்மிளாவிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த காதலுக்கு சர்மிளா பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இருவரும் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். சில நாட்களாக விக்னேஷ் சர்மிளாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சர்மிளா 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்