கொழும்பில் இருந்து ஸ்பெஷல் பொலிஸ் ஆவா குழுவை வேட்டையாடுகிறது
கொக்குவில் பகுதியில் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த “குட்டி” என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் 4ஆம் மாடியிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினரே இவரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைதடிப்பகுதியிலும் ஒரு ரவுடி கைது செய்யப்பட்டுள்ளான். அதை விட யாழில் வேறு இடங்களிலும் இக் கைதுகள் தொடங்கியுள்ளன. இது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனத் தெரியவருகின்றது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்