1 மியூசிக்கை மோபைல் போனில் மாற்றி 4 பேரை கொன்ற லாரி ஓட்டுனர்
போலந்தில் இருந்து லாரி ஓட்டி வந்த தொமஸ் கொராக்கோ என்னும் ஓடுனர். பிரித்தானியாவின் ஏ 34 வீதியில் பயணித்தவேளை தனது மோபைல் போனை எடுத்து பாட்டு ஒன்றை மாற்றி கேட்க்க முற்பட்டுள்ளார். மோபைல் போனில் இவர் பாடலை மாற்றும் வேளை வீதியைக் கவனிக்க வில்லை. இதனால் பாதை மாறி அருகில் அமைதியாக சென்றுகொண்டு இருந்த கார் ஒன்றின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒரு தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகள் குறித்த காரில் இருந்துள்ளார்கள். அவர்கள் அனைவருமே கார் நசுங்கி ஸ்தலத்திலேயே இறந்துபோனார்கள். இக் கொடுமை லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த குடும்பமே ஆட்டம் கண்டுள்ளது.
பாட்டு கேட்க்க வேண்டும் என்பதற்காக மோபைல் போனோடு விளையாடி , 4 உயிரை பறித்துள்ளார் இன் நபர். ஒரு நொடிப் பொழுதில் நான் அனாதையாக நிற்கிறேன் என்று கணவரும் 3 பிள்ளைகளின் தகப்பனுமான அன் நபர் நீதிமன்றில் தெரிவித்தவேளை. நீதிபதியே கண் கலங்கி விட்டார். வாகனத்தை செலுத்தும் போது போனைப் பாவிக்க வேண்டாம் என்றும். வாகனத்தை செலுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும் என்றும் பல விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இதனை கடைப்பிடிக்கிறோம் ? போன உயிர் திரும்பி வருமா ?
இல்லை இந்த பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் ? இதேவேளை போலந்து லாரியில் முன்னால் பொருத்தப்படு இருந்த கமராவில் இந்த விபத்து தெளிவாக பதிவாகியுள்ளது. இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டம் என அதிர்வு இணையம் உங்களை எச்சரிக்கிறது.

(1 மியூசிக்கை மோபைல் போனில் மாற்றி 4 பேரை கொன்ற லாரி ஓட்டுனர்)
ReplyDeleteஅதிர்வு இணையத்தில் தமிழ் மொழி வளர்கிறது
ம்ம்ம் ஏற்றுகொள்கிறோம். முடிந்தவரை ஆங்கிலச் சொற்களை தவிர்க்க முயல்கிறோம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
Delete