பிரான்சில் விபசார விடுதிக்கு செல்லும் முயற்சியில் உயிர்விட்ட முதியவர்..!
பிரான்சில் உள்ள கேன்னஸ் நகருக்கு அமெரிக்காவை சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா சென்றார். பின்னர் இதே நகரில் உள்ள பிரபலமான விபசார விடுதிக்கு சென்றார்.
நள்ளிரவு 1 மணி அளவில் சென்ற அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று விபசார விடுதியின் காவலாளி தடுத்து நிறுத்தி உள்ளார். சில காரணங்களுக்காக உள்ளே அனுமதிக்க முடியாது. திரும்ப சென்று விடுங்கள் என காவலாளி கூறியுள்ளார்.
ஆனால் இதனை ஏற்காத அந்த நபர் காவலாளியை தள்ளி கொண்டு உள்ளே செல்ல முயன்றார். இதனால் ஆத்திம் அ¬ந்த காவலாளி முதியவரை பிடித்து வேகமாக தள்ளினார். ககாவலாளியின் முரட்டு தனமான தாக்குதலால் நிலைகுலைந்த நபர் படியை விட்டு தவறி கீழே விழுந்துள்ளார். ஐந்து மாடிகளை கடந்து கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் காவலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்