இறந்தவர்களை கொண்டாடும் மெக்ஸிகோ நகர வாசிகள்
இறந்தவர்களை கொண்டாடும் வகையில் மெக்ஸிகோ நகரில் வித்தியாசமான ஊர்வலம் நடைபெற்றது. மெக்ஸிகோ நகரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா கொண்டாடப்படுகிறது.
நேற்று துவங்கிய விழாவில் பிரம்மாண்டமான எலும்பு கூடு போன்று வேடமணிந்தவர்கள் அணிவகுத்து வந்தனர். மேலும் சிகரெட் புகைத்தவாறு வந்த எலும்பு கூடு, திருமண உடையில் வந்து முத்தங்களை பரிமாறிக் கொண்ட தம்பதி எலும்பு கூடு என்று விதவிதமாக வந்த உருவங்கள் அனைவரையும் கவர்ந்தன.
இந்த பேரணியை பார்க்க வந்த பார்வையாளர்கள் தங்களது முகங்களில் வித்தியாசமான அச்சறுத்தம் வகையிலான ஓவியங்களை வரைந்திருந்தனர். இதுபற்றி பேசிய சுற்றுலாப் பயணியான பிரிஸ்சில்லா சிமோவ், மெக்ஸிகோவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த விழாவை தாம் முதுன்முறையாக பார்ப்பதாக தெரிவித்தார். இறந்தவர்களை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழா நம் அனைவருக்கும் இறப்பு நிச்சயம் என்பதுடன், ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்