லண்டன் ஈஸ்ட்ஹாமில் சிறுவர் மீது காரை ஏற்றிய நபர் தப்பிச் சென்ற விதம்
லண்டனில் ஈஸ்ட் ஹாம் நகரில் சிறுவர்கள் பள்ளி செல்லும் போது வீதியைக் கடந்துள்ளார்கள். மிக வேகமாக வந்த வாகனம் ஒன்று அவர்கள் மேல் மோதியுள்ளது. அவர்களை அது இடித்த வேகத்தில் அவர்கள் காற்றில் எகிறிப் பறந்து சற்று தூரத்தில் விழுந்துள்ளார்கள். இதனை அருகில் உள்ள CCTV கமரா பதிவுசெய்துள்ளது. இருப்பினும் காரை ஓட்டிச் சென்றவர் நிற்க்கவில்லை. அப்படியே சென்றுவிட்டார்.
இதில் 50 வயதான பெண் ஒருவர், 12 மற்றும் 11 வயது பள்ளிச் சிறுவர்கள் என மூவர் ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர்களில் சிலர் ஆசிய இனத்தவர்கள் என்று கூறப்படுகிறது. சில பிள்ளைகள் கார் வருவதைப் பார்த்து ஓடித்தப்பியுள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்