ஒருபுறம் தேவாலயத்தில் ஜெபம் நடந்து கொண்டிருக்கும் போதே, அருகே உள்ள கட்டிடத்தில் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ..!
கேரள மாநிலம் கொத்தமங்கலத்தில் உள்ள சிரியன் ஜேக்கபைட் தேவாலயத்தில் அமைந்துள்ளது அந்த பள்ளி. ஆசிரியர் சுரேசுக்கு வயது 56. அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் 16 வயது சிறுவன் அவரிடம் தான் படித்து வந்தார்.
அந்த சிறுவனை தவறாக பயன்படுத்த நினைத்த ஆசிரியர் சுரேஷ் கடந்த ஒரு வருடமாக ஸ்பெஷல் கிளாஸ் என கூறி ஞாயிற்றுகிழமை பள்ளிக்கு அழைத்து பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். ஒருபுறம் தேவாலயத்தில் ஜெபம் நடந்து கொண்டிருக்கும் போதே, அருகே உள்ள கட்டிடத்தில் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறார் இந்த ஆசிரியர்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டான். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377(இயற்கைக்கு எதிரான குற்றம்) மற்றும் போஸ்கோ ( செக்ஸ் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்