இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது. எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள்..?
நல்லவர்களோ கெட்டவர்களோ ..குற்றம் செய்தார்களோ இல்லையோ..! ஒருவேளை கொலை செய்ய உடந்தையாக இருந்தால் அது தவறுதான். அதற்காக இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவிப்பதும், முடிவே தெரியாமல் சிறையில் காலம் தள்ளுவதும் எவ்வளவு கொடுமை..?
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் காலம் தள்ளும் இந்த பரிதாபத்துக்குரிய மனிதர்கள் செத்து விட ஆயத்தம் ஆகிவிட்டார்கள் என்பது கசப்பான உண்மை.
சமீபத்தில் சக ரவுடி கைதியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பேரறிவாளன் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கதறி இருக்கிறார்…
ஏற்க்கனவே அவருக்கு உடல் நிலையில் நிறைய பாதிப்புகள். கூடவே ரவுடி தாக்கியதில் மனதாலும் உடலாலும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்.
இனி இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது. எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கதறினார்..! என்ன சொல்வது என்று தெரியவில்லை..!

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்