யாழ் வீரமாகாளி அம்மன் கோவில் ஐயரின் திருவிளையாடல்கள்
யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மன் கோவிலில் கடந்த சில தினங்களாக மாகோற்சம் நடைபெற்று வருகின்றது. நயினாதீவு அம்மன் கோவில் தேர், தீர்த்தத் திருவிழா நாளிலேயே இந்த அம்மனுக்கும் தேர், தீர்த்தம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக் கோவிலில் மகோற்சவ நாட்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தினமும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.
கோவில் அன்னதானத்தில் சாப்பிடுவதற்காக பலரும் ஆசைப்படுவது வழமை. பணக்காரர்,ஏழைகள் என்ற பாகுபாடு இன்றி கோவில் அன்னதானத்தில் கலந்து சாப்பிடுவது என்பது ஒரு தெய்வீகம் கலந்த ருசியை பக்தர்களுக்கு அளிக்கின்றது. இதற்காகவே வசதி படைத்த பல பக்தர்களும் கோவில் அன்னதானத்தில் கலந்து சாப்பிடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றனர்.
இந் நிலையில் இன்று வீரமாகாளி அம்மன் கோவிலில் ஐயராக இருக்கும் கமல் என்பவர் கோவில் அன்னதான நிகழ்வில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை கேவலமாக ஏசியுள்ளார். அத்துடன் இனிமேல் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு மட்டும்தான் அன்னதானம். ஏனையவர்களுக்கு கொடுக்க வேண்டாம் எனவும் மண்டபத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் நின்று கமல் ஐயர் கத்தியதாக பக்தர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மட்டும் ஐயர் சாப்பாடு போட்டுவிட்டு என்ன செய்யப் போகின்றார் என பலத்த சந்தேகங்கள் எழுகின்றன. இவ்வாறான ஐயர்மார் இருக்கும் வரை இந்து சமயம் நீடூழிவாழும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்