1500 வாகனங்களை ஆட்டைய போட்டு விட்டார்கள்! கதறும் நிதியமைச்சர்!! யார் காரணம் ?
கடந்த கால ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட 1500 வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்யப்படவுள்ள வாகனங்களுக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரை மதிப்பீட்டு மூலம் குறிப்பிடப்பட்ட தொகையானது வட்டியுடன் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் பொய் எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த வாரங்களில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கான நிவாரணஙங்கள் கிடைக்கும் வரை அமைச்சர்களுக்கான வாகனங்கள் கொள்வனவுசெய்யப்படக்கூடாது என பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி அமைச்சர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
New comments are not allowed.