Header Ads

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்..

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆலையை அகற்ற வலியுறுத்தி குமரரெட்டியாபுரத்தில் 47 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

கடந்த வாரம் லண்டனில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அங்குள்ள இந்திய தூதரகத்தில் மனு கொடுக்க வந்தனர். ஆனால் மனுவை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கார்லோட் பகுதியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா- கனடா வாழ் தமிழர்கள் நேற்று அமைதி பேரணி நடத்தினார்கள்.

அதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். காப்பர் தொழிற்சாலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் நடித்து காட்டினர்.



இது போன்று அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க், கிளாஸ்கோ பார்க், டல்லாஸ், வாஷிங்டன், மோரிஸ் வில்லே, டோர்னடோ, கூபர்டினோ, ஆல்பெட்டா ஆகிய நகரங்களிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் உள்ளிட்டவற்றை நடத்தி சாகசம் புரிந்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.