70 கலைஞர்கள் இணைந்து வரைந்த மிகப்பெரிய ரங்கோலி..
மகாராஷ்டிரா மாநிலத்தில் அறுவடைக்குப் பிறகு ‘குடி பட்வா’ என்ற மகாராஷ்டிர புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு இந்து நாட்காட்டி படி நாளை மகாராஷ்டிர புத்தாண்டை கொண்டாட உள்ளனர். இந்த விழா மகாராஷ்டிரா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். புத்தாண்டை வரவேற்கும் விதமாக கடந்த சில நாட்களாகவே மாநிலம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தானேயில் உள்ள ஒரு கோவிலில் மிகப்பெரிய ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. 70 கலைஞர்கள் இணைந்து 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு 900 கிலோ வண்ணப்பொடிகள் பயன்படுத்தி வரைந்திருந்தனர். இந்த கோலம் வரைய 9 மணி நேரம் செலவிடப்பட்டதாக தெரிவித்தனர்.
மிகப்பெரிய அளவில் வரையப்பட்டிருந்த வண்ணமயமான இந்த ரங்கோலியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்