Header Ads

சேஸிங் என்றாலே, சிறுத்தை அல்லது இவர்தான்: அக்தர் புகழாரம்..

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டர்பனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 269 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்ககில் இந்தியா களம் இறங்கியது. விராட் கோலியின் அபார சதத்தால் (112) இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலியின் 33-வது சதம் இதுவாகும். தென்ஆப்பிரிக்கா மண்ணில் விராட் கோலியின் முதல் சதம் இதுவாகும். சேஸிங்கில் அவரது 18-வது சதம் இதுவாகும்.

விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பாராட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.



விராட் கோலியின் சதத்தை புகழந்து அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விராட் கோலியின் சூப்பரான மற்றொரு ரன் சேஸ். சேஸிங் என்று வரும்போது விராட் கோலி அல்லது சிறுத்தைதான். இளம் வீரர்கள் விராட் கோலியை ஆட்டத்தை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்று பதிவு செய்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.