உலக சாதனை படைத்த, தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ்..
ஈஸ்ட் லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் பார்டர் அணி சார்பில் மார்கோ மரைஸ் விளையாடினார். கிழக்கு மாகாண அனிக்கு எதிரான போட்டியின் போது மார்கோ மரைஸ் அதிவேக முச்சதம் அடித்தார்.
24 வயதான மார்கோ மரைஸ் 191 பந்துகளில் 300 ரன்கள் விளாசி இச் சாதனையைச் செய்துள்ளார். இதற்கு முன் சார்லி மெக்கார்ட்னி என்ற ஆஸ்திரேலிய வீரர் 221 பந்துகளில் அடித்த மூன்று சதமே சாதனையாக இருந்தது. 96 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார் மார்கோ மரைஸ்.
மார்கோ மரைஸ் தனது முச்சதத்தில் 35 பவுண்டரிகள் 13 சிக்சர்களை விளாசினார். தன் அணி 82/4 என்று திணறிய போது இவர் களமிறங்கினார். இவரும் பிராட்லி வில்லியம்ஸ் (113 நாட் அவுட்) சேர்ந்து 428 ரன்களைச் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்