Header Ads

டீன் ஏஜ் சிறுமியுடன் பாலியல் உறவு வைக்க, அமெரிக்கா சென்ற கனடா வாழ் இந்தியருக்கு நேர்ந்த கெதி ..

கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தினை சேர்ந்தவர் தில்பாக் சிங் (வயது 57).  இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.  கடந்த ஜனவரியில் ஆன்லைன் வழியே தனிநபர் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார்.  அந்நபர் 15 வயது சிறுமி என சிங் நம்பியுள்ளார்.
இதனை அடுத்து 4 மாதங்களாக அந்த சிறுமியிடம் ஆன்லைனில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.  அவருடன் செக்ஸ் வைத்து கொள்வது பற்றிய விருப்பத்தினை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார்.
அதன்பின்பு கடந்த மே மாதம் சிங் கனடாவில் இருந்து அரிசோனாவின் பிளாக்ஸ்டாஃப் பகுதிக்கு சிறுமியுடன் செக்ஸ் வைத்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
அமெரிக்காவில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வந்த நிலையில் அதனை எதிர்கொள்ள அந்நாட்டின் நீதி துறை கடந்த 2006ம் ஆண்டு மே மாதத்தில் புராஜக்ட் சேஃப் சைல்ட்ஹுட் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் சிங்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுகளை சிங் ஒப்பு கொண்டார்.
இதனை அடுத்து சிங்கிற்கு அரிசோனாவின் மத்திய நீதிமன்றம் 46 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.