Header Ads

ஏஞ்ஜலினா ஜூலி போல் மாற எண்ணிய, பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..

ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்ஜலினா ஜூலி உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். 

இப்போது அவருடைய ஈரான் நாட்டை சேர்ந்த தீவிர ரசிகை அவரைப்போல் ஆக வேண்டும் என்று 50 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டு உள்ளார். ஒவ்வொரு கட்டமாக அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உள்ளார் என தி சன் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த ஷாகர் தபார் (வயது 19) ஏஞ்ஜலினாவின் மிகவும் தீவிர ரசிகையாக உள்ளார். அவர் ஏஞ்ஜலினாவிற்காக எதையும் செய்வேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். அந்த ஆர்வம்தான் அவரை ஏஞ்ஜலினா போல் ஆக அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு தள்ளி உள்ளது. கடந்த சில மாதங்களாக 50 முறை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டது மட்டுமின்றி, ஏஞ்ஜலினாவின் உடல் தோற்றம் போலாக கடும் உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொண் உள்ளார், இதனால் 40 கிலோவை குறைத்து உள்ளார். ஷாகர் தபார் ஏஞ்ஜலினா ஜூலி போலாக வேண்டும் என செய்துக்கொண்ட அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 

இப்போது அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. ஒவ்வொரு நிமிடமும் அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. 3,25,000-ஐ தாண்டி பின்தொடர்வோர் எண்ணிக்கை சென்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவருடைய இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் சிலர் அவரை பாராட்டி உள்ளனர். பலர் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏஞ்ஜலினா போலாக வேண்டும் என நினைத்து சோம்பை போலாகிவிட்டீர்கள் எனவும் கேலி செய்து வருகிறார்கள். விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் உங்களுடைய முகத்தில் யார் குண்டு வீசியது என கேள்வி எழுப்பி உள்ளார்? மற்றொருவர் நீங்கள் மனிதர்தானா? என கேள்வி எழுப்பி உள்ளனர். 

1 comment:

  1. ஏஞ்ஜலினா ஜூலி போல் அல்ல பேய் போல் ஆகி விடடார் , பார்க்கவே பயமாக உள்ளது, குழந்தைகள் இவரை பார்த்தால் என்னாவது ????

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.