Header Ads

நான் விபச்சாரம் செய்தேன்: திருநங்கையிடம் ஒபாமா என்ன சொன்னார் தெரியுமா?



இந்திய சட்டப்பிரிவு கீழ் நான் ஒரு குற்றவாளி என கூறிய திருநங்கைக்கு ஒபாமா பதிலளித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஒரு அரங்கில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.
இதில் சமூக ஆர்வலர்கள், சாதனையாளர்கள் என 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலரான திருநங்கை அக்கை பத்மஷால் இதில் கலந்து கொண்டு ஒபாமாவிடம் கேள்வி கேட்டார்.
அப்போது, திருநங்கையான நான் இந்திய அரசு சட்டப்பிரிவுக்கு கீழ் ஒரு குற்றவாளி. நான் விபச்சாரம் செய்துள்ளேன், பிச்சை எடுத்துள்ளேன். 
இந்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளேன். சிறுபான்மையாக இருக்கும் நாங்கள் புறக்கணிக்கப்படுவதிலிருந்து எங்களுக்கு மாற்றம் எப்படி வரும் என கேட்டார்.
அதற்கு ஒபாமா, இந்தியாவின் அரசியலமைப்பை பற்றி முழுவதும் தெரியாமல் கருத்து கூற விரும்பவில்லை.
ஆனால் உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது. உங்கள் குரலை பலரும் கேட்குமாறு செய்வது தான் இதன் தீர்வு.
நீங்கள் சந்தித்த சவால்களை பிறர் அறிய செய்வதன் மூலம் அதே போன்ற பிரச்சனையை அவர்கள் சந்தித்தால் அவர்களும் உங்களுடன் கை கோர்ப்பார்கள்.
இந்த வட்டம் பெரிதாகி பெரிய மாற்றம் உண்டாகும் என பதிலளித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.