Header Ads

ஓடும் ரெயிலிருந்து, மாணவியை தள்ளிவிட்ட திருடன்..

மராட்டிய மாநிலம் தலைநகரான மும்பையில் மருத்துவ மாணவிக்கு நடந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பன்வேல்-வாஷி ரெயிலில் இரவு 11 மணிக்கு ருத்துஜா போடாகே என்ற 19 வயது மருத்துவ மாணவி பயணம் செய்தார்.

ரெயிலானது ஜீனினாநகர் நிலையத்திற்கு அருகில் வரும் போது திடீரென அவர் இருந்த கம்பார்ட்மண்டிற்குள் ஏறிய மர்ம  நபர் மாணவியிடம் நகை மற்றும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளார். அதனால் பயந்த மாணவி தனது உடமைகளை கொடுக்க முடிவு செய்தார். அதற்குள் ரெயில் நிலையம் வந்து விட்டதால் அவனுடன் சண்டையிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாணவியை கீழே தள்ளிவிட்டு அவளிடமிருந்த 38 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றான்.

கீழே விழுந்ததில் மாணவிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிசிடிவி பதிவை சோதனை செய்து வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.