ஆதரவற்ற நிலையில் மரணமடைந்த, இந்து மதத்தவரின் உடலை தகனம் செய்த முஸ்லிம்கள்.. நெகிழ்ச்சிச் சம்பவம்..
மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்துக்கு உட்பட்ட பேகம்கஞ்ச் பகுதியில் பிரேம்சிங் சாகு (வயது 50) என்பவர் வசித்து வந்தார். ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த இவர் நாராயன்தாஸ் தெக்ரியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலை தகனம் செய்ய யாரும் முன்வரவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர், அங்கு செயல்பட்டு வரும் முஸ்லிம் தியோகர் கமிட்டியின் தலைவர் ஷகீல் அகமதுவுக்கு தகவல் கொடுத்தார். முஸ்லிம் மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த அமைப்பு, சாகுவின் உடலை தகனம் செய்ய முன்வந்தது.
இது தொடர்பாக பேகம்கஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலோக் ஸ்ரீவஸ்தவாவுக்கு அந்த அமைப்பினர் முதலில் தகவல் தெரிவித்தனர். பின்னர் சாகுவின் உடலை அருகில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்று இந்து முறைப்படி தகனம் செய்தனர். அவரது அஸ்தியை சேகரித்து மத்திய பிரதேசத்தின் நர்மதை நதியிலும், அலகாபாத்தில் கங்கை நதியிலும் கரைக்கப்படும் என ஷகீல் அகமது கூறியுள்ளார்.
ஆதரவற்ற நிலையில் இறந்து போன இந்து மதத்தவரின் உடலை முஸ்லிம்கள் தகனம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்