ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் பலி..
ஆப்கானிஸ்தானின் நாங்கார்ஹர் மாகாண தலைநகரான ஜலலாபாத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு வெளியே நேற்று முன்தினம் மாலை மோட்டார் பைக்கில் வந்த தீவிரவாதி, கூட்டமான மக்கள் பகுதி அருகே வந்து, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தான்.
இந்த கோர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அம்மாகாண செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் முன்னர், மைதானத்தில் உள்ளே அரசு ஆதரவு கூட்டம் ஒன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்