Header Ads

மனைவி உட்பட 2 பேரை சுட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட என்.எஸ்.ஜி. அதிகாரி...

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள மானசேர் பகுதியில் தேசிய பாதுகாப்புப்படை முகாம் உள்ளது.

இந்நிலையில், நேற்றுக் காலை முகாமில் இருந்த அதிகாரி தனது மனைவி மற்றும் உறவுக்காரப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதில் படுகாயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்.எஸ்.ஜி படை வீரர்கள் மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்படுவர். இந்த முகாமில் ஏற்படும் சிறிய விபத்தும் மிகவும் ஆபத்தானதாக கருதப்படும்.

மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.