Header Ads

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா, 2018 பாகிஸ்தான் பொது தேர்தலில் போட்டியிடுகிறது..

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத்-உத்-தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறான்.

இவ்வியக்கமும் தடைவிதிக்கப்பட்ட இயக்கமாக ஐ.நா., அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அரசு அமைந்ததும் தொடர் நிர்ப்பந்தத்தின் காரணமாக பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான். ஆனால் 297 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டான். இது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கிடையே பயங்கரவாதி ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி உள்ளான். அக்கட்சி தேர்தல் கமிஷனால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சியான மில்லி முஸ்லிம் லீக் கட்சிக்கு அரசு அங்கீராகம் வழங்குவதற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் மற்றும் உளவுத்துறையால் பாதுகாப்பு தெளிவு சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால் ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா 2018 பாகிஸ்தானில் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின், தாய் அமைப்பான ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா,  மில்லி முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியாக பொதுத்தேர்தலில் களமிறங்குகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜமாத்-உத்-தவா ஆதரவாளர்களை சந்தித்து பேசிய ஹபீஸ் சயீத், மில்லி முஸ்லிம் லீக் அடுத்த வருடம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது, 2018ம் ஆண்டை காஷ்மீர் விடுதலை போராட்டத்திற்காக அர்ப்பணிக்கிறேன் என கூறிஉள்ளான்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.