Header Ads

200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி..

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் இன்று காலை 200 அடி பள்ளத்தில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லக்காவரம் பகுதியில் உள்ள மேர்துமில்லி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வேன் இன்ஜின் மிகவும் சூடானதால் ஓட்டுநர் வேனை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளார். வேன் நகராமல் இருக்க டயர் அடியில் கல்லை வைத்துள்ளார்.

ஆனால், வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த 200 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள சித்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 14 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.