குடியரசு தினத்தில் தாக்குதல்: மும்பை விமான நிலையத்தில், ஐ.எஸ் பெயரில் மிரட்டல் கடிதம்..
மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலைய கழிவறையில் நேற்று மாலை ஐ.எஸ் இயக்கம் எழுதியதாக கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், அடுத்தாண்டு குடியரசு தினத்தில் சரக்கு விமானங்களை தகர்ப்போம் என்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் அளித்தனர்.
சரக்கு பிரிவில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சந்தேகப்படும் வகையிலான பொருட்கள் சிக்கவில்லை. இதனால், இது ஒரு போலி மிரட்டல் கடிதமாக இருக்கும் என மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்