வீடில்லாதவர்கள் தங்குவதற்கு சூப்பர் இடம் தயார்: அசத்திய பிரித்தானிய பெண்கள்..
வீடில்லாமல் சாலையில் வசிப்போருக்கு உதவும் வகையில் இரண்டு பெண்கள் ஒரு திட்டத்தின் மூலம் பேருந்தையே தங்கும் வீடாக மாற்றியுள்ளனர்.
பிரித்தானியாவின் Portsmouth நகரை சேர்ந்தவர்கள் சேமி பேர்கிராப்ட் மற்றும் ஜோன் வைன்ஸ்.
இரண்டு பெண்களும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தலைவராக உள்ளார்கள், Rucksack என்ற பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் கைவிடப்பட்ட வாகனத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டது.
இதில் சேமியும், வைன்ஸும் இணைந்தார்கள், இதையடுத்து சுமார் 80 ஊழியர்கள் உதவியுடன் கைவிடப்பட்ட டபுள் டக்கர் பேருந்து வீடு போல தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
வீடில்லாதவர்கள், அதிலும் முக்கியமாக குளிர்காலத்தில் சாலையில் வசிப்பவர்கள் இங்கு இனி தங்கலாம்.
பேருந்தானது நகரில் உள்ள செயின்ட் அகதா தேவாலய கட்டிடத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எட்டு மாத காலத்தில் உருவான இந்த பேருந்து வீட்டில் 12 படுக்கைகள் போடப்பட்டுள்ளதுடன், அழகான சமையலறையும் உள்ளது.
பேருந்தை வீடாக மாற்ற மொத்தம் $8,000 செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்