மன்னாரில், திடீரென சீற்றம் கொண்ட கடல்..
மன்னாரில் இன்று காலை முதல் கடலில் சிறு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கொந்தளிப்பால் மன்னார் வவுனியா பிரதான வீதியில் மன்னார் மேம்பாலத்தை அண்மித்த பகுதிகளில் கடலலைகளின் சீற்றம் அதிகரித்த காரணத்தினால் வீதிக்கும் மேலால் அலைகள் அடிக்கின்றன.
இதனால் இவ் வீதியின் மேல் கடல் தாவரங்கள் பரவிக்கிடக்கின்றன,
அத்துடன் இக் காட்சியை அவ் வீதியால் பயணம் செய்யும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்..
கடந்த வருடமும் இது போன்ற கடல் சீற்றம் ஏற்பட்டதாக நகர வாசிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்